
யோக வாழ்வியல் வழி வீரக்கலை

Strength. Determination. Clarity. Discipline.


aathi silambam
Aathi Silambam Martial Arts Academy is a registered not-for-profit organization founded by Aasan Pathmakumar Velummylum with the aim of popularizing the Tamil Martial Art and help people experience transformation in physical, mental, and energy dimensions.

aBOUT AATHI SILAMBAM
Welcome to Aathi Silambam Martial Arts Academy. Breaking down the name, Aathi Silambam: "Aathi" means "original" and "Silambam" means "bamboo staff martial art". We are pleased to offer our traditional martial art silambam to the community. Ours is the first and only school of this style of martial art in Canada. We offer classes maintaining the authenticity of the art, adapting the teaching methodologies to suit Canadian children & adults. These powerful practices help individuals gain health, improve concentration, memory, intelligence, agility, alertness, sense of timing, peace of mind, intuition, joy, self-defense, discipline, and self-governance. For the benefit of the participants, we have incorporated selected yoga practices that help condition the body, mind, and energy to aid the learning process.
lineage
Peraasan Sothisivam Nataraja
.jpg)
Aaasan Pathmakumar Velummylum





சிலம்பம் ஆசான் திரு. பத்மகுமார் வேலும்மயிலும்
கனேடிய மண்ணில் சிலம்பம் என்னும் பொழுது நினைவில் வருபவர் ஆசான் பத்மகுமார்.
ஈழ மண்ணின் வீரம் செறிந்த வல்வெட்டித்துறையில் பிறந்து மரபு வழியாக ஆதிக் கலை பேணிக்காப்பதில் இன்று வரை முன்னுதாரணமாக திகழ்பவர் இவர் ஒருவரே. வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இவரது குருவான ஜோதி சிவன் நடராஜா என்பவரிடம் முறைப்படி சிலம்பக்கலை பயின்று 1983 ஆம் ஆண்டு இவர் பிறந்த மண்ணிலேயே அரங்கேற்றமும் நடந்தது. இவர் இக்கலை பயில்வதற்கு பெரும் வழிகாட்டிய தந்தை வழிப் பேரனும், தந்தையாரும், மற்றும் அவரது குடும்பத்தினரும் இக்கலையை பயின்று இதனை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளனர்.
தமிழர்களின் மரபு வழியாக வந்த இக்கலையை இன்று வரை பேணி காத்த பெருமை இவரையே சாரும் இவர் குரு பரம்பரையாக இக் கலைய கற்றாலும் இந்தியாவில் மதுரை, திருச்சி, சேலம், சென்னை, கேரளா, சிதம்பரம், போன்ற இடங்களிலும் இக்கலை நுட்பங்களை கற்றுக் கொண்டதோடு கற்பிக்கவும் செய்தார். ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு பயிற்சியை அளித்த காலத்தையே ஆத்ம திருப்தியாக இன்றும் நினைவு கூறுகிறார். இன்றைய புலம்பெயர் நாடாகிய கனடாவில் காலநிலை மாற்றங்கள், சமூக சூழல் மாற்றங்கள் இவற்றுடன் போராடி இன்றும் இக்கலையை வளர்த்து வருகின்றார் என்றால் தமிழர் பாரம்பரிய கலையை அழியவிடாமல் பாதுகாப்பதற்கும் இக்கலை மீது அவர் கொண்டுள்ள ஆர்வமும் தான் என்று குறிப்பிட வேண்டும்.
அத்துடன் இக்கலையில் உள்ள பழம்பெரும் நுணுக்கங்களை மாற்றாமல் அப்படியே கற்றுத் தருகிறார் என்றால் ஆசான் பத்மகுமார் மட்டும்தான். வருமான நோக்கமின்றி தமிழ் மக்களிடையே வீரக்கலையை பயிற்றுவித்து தமிழர் வீர மரபை இன்றும் பேணிக் காக்க வேண்டும் என்பதையே குறிக்கோளாக கொண்டு கண்டிப்பான உணர்வுடன் கற்பித்து வருகிறார் என்பது போற்றப்பட வேண்டிய ஒன்றாகும். அத்துடன் இக்கலையை கற்க வரும் மாணவர்களுக்கும் ஈடுபாடு, ஆர்வம் ஏற்படும் முறையில் கற்பித்து வருகின்றார் என்றே கூற வேண்டும்.
சிறுவர் முதல் முதியோர் வரை முக்கியமாகப் பெண்களும் ஆர்வமுடன் கற்றுக் கொள்கின்றார்கள் என்றால் அது ஆசான் திறமையை காட்டுகின்றது எனலாம். 1996இல் இலங்கையிலிருந்து தமிழ்ப் பேராசிரியரான சிவத்தம்பி அவர்கள் கனடாவுக்கு வந்திருந்த பொழுது அம்மேடையில் சிலம்பம் நிகழ்ச்சியும் இடம் பெற்றது. அந்த நிகழ்ச்சி மூலம் கனடா வாழ் தமிழர்கள் மத்தியில் இக் கலைக்கு ஏற்பட்ட ஆதரவானது அவருக்கு உந்து சக்தியை ஏற்படுத்தியது.
இந்த உந்து சக்தியானது இன்று வரை ஆசான் பத்மகுமார் தலைமையில் பல கோயில் நிகழ்ச்சிகளிலும், கலை அரங்க நிகழ்ச்சிகளிலும் சிலம்பக்கலை முக்கிய இடம் பெற்று வருவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. சிலம்பக் கலையில் முதல் முதலில் ஈழத்தமிழ் பெண்களையும் இந்நிகழ்ச்சிகளில் பங்குகொள்ள வைத்து அரங்க நிகழ்ச்சிகளில் இடம் பெற வைத்த பெருமை ஆசானையே சாரும்.
தமிழரின் பாரம்பரிய கலையை என்றும் நிலைநாட்டிக் கொண்டிருக்கும் ஆசான் பத்மகுமார் தமிழ் மக்கள் மத்தியில் போற்றப்பட்டு வருகிறார்.

The Right Honourable Justin Trudeau, Prime Minister of Canada, trying Silambam at Tamil Fest

The Right Honourable Justin Trudeau, Prime Minister of Canada, trying Silambam at Tamil Fest


The Right Honourable Justin Trudeau, Prime Minister of Canada, trying Silambam at Tamil Fest
பயிற்சி கட்டமைப்பு
1
மூட்டு பயிற்சிகள்
4
சக்தி கையாள்தல்
2
தசை நார் வலுப்படுத்தல்
5
மனதை ஓர் நிலைப்படுத்தல்
3
தசைகள் வலுவூட்ட்டல்
6
தன்னை அறிதலுக்கான வழிகாட்டல்
WHAT PEOPLE SAY

Amazing environment,great instructor( Pathman Asaan).I speak from my own experience this is a great place to learn silabam the most prominant Tamil martial art form.It is instructed in a step by step manner so it makes it easier to learn.

Best place to learn silambam. I would recommend going here if you want to learn silambam properly.

The benefits from practicing silambam here far surpassed my expectations. Through these classes, my overall posture was improved and I am able to be at my best physical shape and health.
aathi silambam
210 SILVER STAR BLVD, UNIT 850
SCARBOROUGH ON M1V 5J9
Tel: 416 556 6130
Email: aathisilambam@gmail.com